கி.பி. 570 ஆவது வருடத்தில் அமீனா என்ற விதவைப் பெண், அரேபியா நாட்டில் உள்ள மெக்காவில் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து அம்மகவை, 'குத்தம்' எனப் பெயரிட்டாள். ( ஹலாபி என மற்றொரு பெயரும் உண்டு ). முகம்மது அல்லது புகழுக்குரியவர் என்ற பெயரை தனது 53வது வயதில் மதிஈனாவுக்கு குடிபெயர்ந்த பின் தானே சூட்டிக் கொண்டார். அப்பெயராலயே இன்றும், மிக பிரசித்தமாக அழைக்கப்படுகிறார். தனக்குப் பிறந்த ஒரே குழந்தையை ஆறாவது மாதத்தில், பாலைவனத்தில் வசிக்கும் ஓர் பெண்ணிடத்தில் அமீனா கொடுத்து விட்டாள்.
சிலப் பணக்கார அரேபிய பெண்மணிகள் சிலதடவை தங்களது சிறுக் குழந்தைகளுக்கு தாப்பால் சுரக்கும் தாதிகளை கூலிவேலைக்கு அமர்த்துவது உண்டு. இச்செயல் அவர்களைக் குழந்தகளைப் பேணும் பணியிலிருந்து சற்று விலக்கி, அடிக்கடி இன்னுமொரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பு உண்டு பண்ணும். பல குழந்தைகளுக்குத் தாயானால், அவர்களுக்கு அரேபிய சமூகத்தில் தனி அந்தஸ்து ருந்தது. ஆனால், அமீனாவோ ஒருக் குழந்தைக்குத் தாயான ஏழை விதவை. முகம்மதுவின் தந்தை அபுதுல்லா இறந்துப் போன ஆறாவது மாதத்திற்கும் முகம்மது பிறந்தார். பிறரிடம் தான் பெற்ற குழந்தையைக் கொடுத்து தனியாகவே வளர்த்து வரும் இந்தப் பழக்கம் அவ்வளவு நடைமுறையிலும் இல்லை. உண்மையில், முகம்மதிவின் முதல் மனைவி கதீஜா, மெக்காவிலேயே மிகவும் செல்வம் செறிந்தவர், மேலும் தனது முதல் திருமணங்களின் வழியாக மூன்று குழந்தைகளுக்குத் தாயாயிருந்தாலும், அவருக்கு முகம்மதின் மூலமாக பிறந்த ஆறு குழந்தைகளையும் சேர்த்து, ஒன்பது குழந்தைகளையும் ஒன்றாகவே வளர்த்து வந்தாள்.
ஏன் அமீனா எதற்காகத் தனது ஒரேக் குழந்தையை பிறர் வளர்த்துவர எப்படிக் கொடுத்திருக்க முடியும். முகம்மதுவின் தாயின் அந்த முடிவைப் பற்றி, மிகக் குறைவான தகவல்களே நமக்குக் கிடைக்கின்றன.
முகம்மதுவின் தாய் அமீனாவுடைய மன உணர்வு நிலையைப் பற்றி சொல்ல வேண்டுமானால், தக்கு புதிதாகப் பிறந்த குழந்தை முகம்மதுக்கு, ஏன் தனது தாய்ப்பல் கொடுக்கவில்லை என்பது எல்லோருக்கும் ஓர் ஆவலைத் தூண்டும் தகவலாகும். அவர் பிறந்தவுடன் அக்குழந்தையை அவரது மாமனான அபூ லஹாபின் வேலைக்காரி தூய்பாவிடம் பேணத் தந்து விட்டாள் ( அபூ லஹாபையும், லஹாபின் மனைவியையும் ஒருங்கே சபித்தார் முகம்மது பிற்காலத்தில் - குரான் சுரா 111 ) ஏன் அமீனா தனது குழந்தையைப் பேணவில்லை என்பது பற்றி ஒன்றும் கூறவில்லை. இவை எல்லாமே நமது அனுமானம் தான். இவ்வளவு சிறு வயதிலே விதைவையானது குறித்து, மகிழ்ச்சியற்ற மனச்சோர்வா அல்லது கணவனை இழந்த துக்கமா அல்லது அடுத்து கிடைக்கும் மறுமணத்திற்குத் தடங்கலாக இருக்கலாமோ என்ற உணர்வா ?
குடும்பத்தில் சாவு, மூளையில் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி மனச்சோர்வை உண்டாக்கலாம். ஒரு மணமான பெண்ணின் மனநிலை பாதிப்பை அதிகரிக்கவல்ல வேறு பல காரணங்களாவன்: தனி வாழ்க்கை, இறந்துவிட்ட கணவனால் உண்டாக்கப்பட்ட கருவினால் கவலை, மிக இளவயதில் தாம்பத்ய உடலுறவு திடீரென நின்றுவிட்டதனால் ஏற்பட்ட உடல்பசி ஏக்கம், பணமுடையினால் பிரச்சனை, சிறுவயதில் தாய்மை அல்லது வருங்காலம் எப்படி வாய்க்குமோ என்ற கலக்கம் முதலியன். அமீனவோ, தன் கணவனை இழந்து, அப்போது தனியான வாழ்வும், வறுமையுடனும், மேலும் மிக இளமையுடன் இருந்தாள். இந்த தகவலின் பேரில், அவள் மனச் சோர்வுக்கு உட்பட வேண்டிய நபர் தானே. மனச்சோருவ்ம் ஒரு மணமான விதைப் பெண்ணுக்கு வயிற்றில் வளரும் சேயுடன் இருக்க வேண்டிய உணர்விலும், மேலும், குழந்தைப் பிறக்கும் அவளது மனநிலை பாதிக்கப்பட ஒரு காரணமாகலாம்.
மனநிலை பாதிப்பு ஏற்பட்டால் அது கர்ப்பிணிகளின் கருவை நேராகவே பாதிக்க முடியும். அக்குழந்தைகள் மிகவும் எளிதில் கோபம் கொள்பவராயும்,மிகவும் சோம்பேறியாகவும் ஆகலாம். அப்படிப் பிறந்த குழந்தைகள் சற்று வளர்நந்து சிறுவர்களாக வளரும் போது கற்பதில் மெதுவாகவும், உணர்ச்சிகளை பிரதிபலிக்க மறுமொழி கூறாமலும், அவர்களே வலுவில் எவரையும் தாக்குவதில் விளைவுகளினாலும் ஏற்படும் பிரச்சனைகளாலும் பாதிக்கப்படலாம்.
தொடரும் ....
பின் குறிப்புகள் :
1. ஒரு மரபுப் பிரிவினரின் கூற்றுப்படி முகம்மதுவின் உண்மைப் பெயர் குத்தாம் ஆகும். அவர் ஹலாபி என்றும் அழைக்கப்பட்டார். அவர் தமது 53ம் வயதில் மெதினாவுக்கு இடம்பெயர்ந்த போது தன் பெயரை முகம்மது என மாற்றிக் கொண்டார். அதாவது புகழுக்குரியவர் என்று அர்த்தமாகும்.
2. முகம்மதுவுக்கு கதிஜா மூலம் நான்கு மகள்களும், இரு மகன்களும் இருந்தனர். மகங்களின் பெயர் காசிம், அப்த் அல் மெனாஃப் ( மெனாஃப் என்பது குரேசிகளின் தெய்வங்களில் ஒன்று ). ஆனால் அவர்கள் சிறுவர்களாக இருக்கும் போதே இறந்துவிட்டனர். அவரின் மகள்களும் பருவமடைந்து மணந்துக் கொண்டனர் ஆனால் அவர்களும் இளம் வயதிலேயே இறந்துவிட்டனர். அவரின் இளையப் புத்திரி பாத்திமாவுக்கு இரு மகன்கள் இருந்தனர். பாத்திமாவும் முகம்மது இறந்து ஆறு மாதங்களில் இறந்துவிட்டார்.
நண்பரே எடுத்ததுமே
ReplyDeleteபவுன்சர் போடுரீங்க.இந்த பதிவின் புத்தகத்தின் ஆங்கில மூலம் படித்திருக்கிறேன்.சில சந்தேகங்கள்.
/1. ஒரு மரபுப் பிரிவினரின் கூற்றுப்படி முகம்மதுவின் உண்மைப் பெயர் குத்தாம் ஆகும். அவர் ஹலாபி என்றும் அழைக்கப்பட்டார். அவர் தமது 53ம் வயதில் மெதினாவுக்கு இடம்பெயர்ந்த போது தன் பெயரை முகம்மது என மாற்றிக் கொண்டார். அதாவது புகழுக்குரியவர் என்று அர்த்தமாகும்./
அ).திரு முகமதுவின் பெயர் குரானில் நான்கு இடங்களில் மட்டுமே'முகமது 'என்றே அழைக்கப் படுகின்றார்.
3:144,33:40 ,47:2 ,48:29 நான்கு சுராக்களுமே மதினாவில் [ஹிஜ்ராவிற்கு பிற] இறங்கிய வசனங்கள்.கணக்கு சரிதான்.குத்தாம்&ஹலாபி என்று பெயர் கூறுவத்ற்கு ஆதாரம் அளிக்க முடியுமா?
பிறகு வருகிறேன்
நன்றி
தோழர் சார்வாகனுக்கு வணக்கம்,
ReplyDeleteகருத்துக்கு நன்றிகள். ஹலாபி & குத்தாம் என்ற பெயரின் ஆதாரங்கள் என்னிடம் இல்லை. தேடித் தர முயல்கிறேன். நீங்கள் படித்த அதே நூலினைத் தமிழில் தர ஒரு சிறு முயற்சி. பலரை சென்றடைய விரும்பினேன். தொடர்ந்து வருக !
நன்றிகள்.
nice
ReplyDeleteபயனுள்ள தகவல்கள் .. புதிய விடயங்கள் பல அறியக்கூடியதாக இருக்கு .. தொடருங்கள் சகோ !
ReplyDeleteநல்ல பலத்தகவல்களை தந்துள்ளீர்கள்
ReplyDeleteசில இடங்களில் வார்த்தைப் பிழை உள்ளது சரிபடுத்திக்கொள்ளுங்கள், ஏனனில் நீங்கள் எழுதுவது மதம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், ஒரு எழுத்தை இழந்தாலோ கூடினாலோ வேறு அர்த்தம் வர வாய்ப்பு அதிகம்
எடுத்துக்காட்டாக
விஷயம்
விஷம்
நல்ல பதிவு நண்பரே வாழ்த்துக்கள்
you write what ever rubbish you want,,
ReplyDeletebut please don't use Islamic name and mask for your writing like Iqbal selvan.
please..........
please .............
Geetha6, இக்பால் செல்வன், ஷர்புதீன் - தோழர்களுக்கு வணக்கம், இங்கே வந்து என்னை ஊக்கப்படுத்தியதற்கு நன்றிகள் !
ReplyDeleteA.R.ராஜகோபாலன் - தங்கள் சுட்டிக் காட்டலுக்கு நன்றிகள். எழுத்துப் பிழைகளைத் திருத்திக் கொள்கின்றேன். நன்றிகள்
ReplyDeletesharfu - தோழரே ! நான் ஒன்றும் பொய் பெயரில் எழுதவில்லை. நானும் உங்களைப் போல இஸ்லாமில் பிறந்து வளர்ந்து பின்னர் அதனை வெறுத்து வெளியேறியவன் தான். இலங்கையில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து - தற்சமயமும் தென் கிழக்காசிய நாடொன்றில் வசித்து வருகின்றேன் .
ReplyDeleteஇங்கு நான் எழுதப் போவது குப்பையும் அல்ல, எனது பெயர் போலியுமல்ல ..
atharam illamal katturaiya!!!
ReplyDeleteunaku evvalo thairiyam, eppadi atharam illamal, nee paditha angila puthagathai vaithu katturai eluthalam.un katturaiyil entha unmaiyum kidayathu.
neengal eluthum katturaiku atharam vendum
ReplyDelete